உலு சிலாங்கூர், நவ. 20-
மாது ஒருவர் காருக்குள் இறந்து கிடந்தது பொது மக்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் 2.50 மணியளவில் உலு சிலாங்கூர், புக்கிட் செந்தோசா, தாமான் தாசேக் விடுரி என்ற இடத்தில் 38 வயதுடைய மாது சுயநினைவின்றி காருக்குள் கிடந்ததாக தெரிவிக்கப்பட்டது*
உள்ளூரைச் சேர்ந்த அந்த மாது, Suzuki Swift காரில் ஓட்டுநர் இருக்கையில் சாய்ந்தப்படி வெகு நேரம் கிடந்தது குறித்து சந்தேகித்த பொது மக்கள், இது குறித்து போலீசுக்கு தகவல் அளித்ததாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் அகமட் பைசால் தஹ்ரின் தெரிவித்தார்.
அந்த மாதுவின் உடலில் எந்தவொரு காயமும் காணப்படவில்லை. எனினும் கார் கதவுகளை பூட்டிக்கொண்டு, நச்சுப்புகையை நுகர்ந்து, மூச்சடைப்பு செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும் மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிவதற்கு அந்த மாதுவின் உடல் கோலகுபு பாரு பாரு மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.