எண்ணெய் நிலையங்களில் அந்நியத் தொழிலாளர்களை அமர்த்திக்கொள்ள அனுமதி

கோலாலம்பூர், நவ-20


எண்ணெய் நிலையங்கள் நடத்துநர்கள் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்வதற்கு அரசாங்கம் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

எண்ணெய் நிலையங்களில் கேபே போன்ற வர்ததகத் தளங்களில் துப்புரவு, கழுவுதல், சுத்தம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும், எண்ணெய் நிலையங்களில் பல்பொருள் விற்பனை தளத்தில் வேலை செய்யவும் அந்நியத் தொழிலாளர்கள் அனுமதிக்கப்படுவர் என்று சைபுடின் விளக்கினார்.

எண்ணெய் நிலையங்கள் தற்போது கேபே மற்றும் மளிகைப்பொருட்களை விற்பனை செய்யும் அளவிற்கு அவற்றின் தோற்றம் மாற்றி அமைக்கப்பபட்டு வருகின்றன.

இந்நிலையில் எண்ணெய் நிலையங்களில் நிலவி வரும் தொழிலாளர்கள் பற்றாக்குறையை நிறைவு செய்வதற்கு அந்நியத் தொழிலாளர்களை எடுப்பதற்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சைபுடின் தெளிவுப்படுத்தினார்.

WATCH OUR LATEST NEWS