மறுசுழற்சி தொழிற்சாலை தீ பிடித்து எரிந்தது

சிம்பாங் புலாய், நவ. 20-

சிம்பாங் புலாய் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு மறுசுழற்சி தொழிற்சாலை தீ பிடித்து எரிந்தது. காலை 10.14 மணிக்கு இந்த தகவலைப் பெற்ற தீயணைப்புத்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, தொழிற்சாலையின் பெரும்பகுதி தீயில் கருகி இருந்தது. தீயை அணைக்க அவர்கள் பல மணி நேரம் போராடினர். இந்த தீ விபத்தில் யாரும் காயமடையவில்லை.

சிம்பாங் புலாய், பாசிர் பூத்தே, கோப்பேங் தீயணைபு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பெக்கான் பாரு மெங்லெம்பு ஆகிய பகுதியைச் சேர்ந்த தன்னார்வத் தீயணைப்பு வீரர்களின் உதவியும் கிட்டியது. காலை 11 மணி அளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

WATCH OUR LATEST NEWS