எந்த விதமான அதிகாரப்பூர்வ கொண்டாட்டங்களும் விழாக்களும் நடத்தப்படாது

கோலாலம்பூர், நவ. 20-

மலேசியாவின் 10வது பிரதமராக டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பதவியேற்ற இரண்டு ஆண்டுகள் நிறைவு பெறுவதால், எந்த விதமான அதிகாரப்பூர்வ கொண்டாட்டங்களும் விழாக்களும் நடத்தப்படது என்று தகவல் தொடர்பு அமைச்சர், பாஹ்மி பாட்சில் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் 24ஆம் தேதியன்று, பிரதமர் தென் கொரியாவுக்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக பாஹ்மி கூறினார். மலேசியா – தென் கொரியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவை மேம்படுத்த இப்பயணம் அமைய உள்ளதாகவும் இந்தப் பயணத்தின் போது பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக பாஹ்மி பாட்சில் குறிபிட்டார்.

அண்மையில் பிரதமர் பெரு, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட பயணமும் மிகவும் முக்கியமானது என்றார் பாஹ்மி . இந்த பயணத்தின் போது, அவர் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற APEC மாநாட்டிலும், G20 மாநாட்டிலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS