2027-ம் ஆண்டு கல்வி அமைச்சு அறிமுகப்படுத்த உள்ள புதிய கல்வித்திட்டம்

கோலாலம்பூர், நவ. 20-

எதிர்வரும் 2027-ம் ஆண்டு கல்வி அமைச்சு அறிமுகப்படுத்த உள்ள புதிய கல்வித்திட்டத்தில், குழந்தைகளின் அடிப்படை வாசிப்பு, எழுத்து, கணிதத் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இதற்காக, பல்வேறு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக துணைக் கல்வி அமைச்சர் ஒங் கா ஓ தெரிவித்தார்.

குறிப்பாக, பள்ளிக்கூடங்களில் குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தவும், அவர்கள் பின்தங்காமல் இருக்கவும் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதில், குழந்தைகளின் வாசிப்பு, எழுத்து, கணிதத் திறன் ஆகியவர்றைத் தொடக்கக் கட்டத்திலேயே சோதித்து, தேவையான உதவிகளை வழங்குவதும் அடங்கும் என ஒங் கா ஓ குறிப்பிட்டார்.

இந்தப் புதிய கல்வித்திட்டத்தின் மூலம், குழந்தைகள் அனைவரும் அடிப்படை வாசிப்பு, எழுத்து, கணிதத் திறன் ஆகியவற்றை எளிதில் கற்றுக்கொள்ள முடியும் என்று கல்வித்துறை நம்புகிறது. இதன் மூலம், அவர்கள் மேல்நிலைப் படிப்புகளை எளிதாக தொடர முடியும் எனவும் துணை அமைச்சர் மேலும் சொன்னார்.

WATCH OUR LATEST NEWS