பேருந்துகளில் மின்சார சாக்கேட் பயன்பாட்டை உடனடியாக நிறுத்துவீர்

நவ. 20-

அனைத்து பேருந்து நிறுவனங்களின் பேருந்துகளில் உள்ள 3-PIN மின்சார சாக்கெட்டுகளை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளது மலேசிய போக்குவரத்து அமைச்சு.

இது குறித்து தகவல் அளித்த போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறுகையில், பேருந்து நிறுவனங்கள் அனைத்தும் மலேசிய தரநிலை துறையால் அங்கீகரிக்கப்பட்ட WIRING ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறினார்.

அண்மையில், இளைஞர் ஒருவர் பேருந்தில் மின்சார சக்கேட் பயன்படுத்தும்போது மின்தாக்கத்தால் இறந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணையில், பேருந்தின் மின்சார WIRING சரியாக இல்லாதது தெரியவந்துள்ளது. இதனால், அனைத்து பேருந்துகளிலும் மின்சார சாக்கெட்டுகளை சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது போக்குவரத்து அமைச்சு.

WATCH OUR LATEST NEWS