கோலாலம்பூர், நவ. 20-
கோலாலம்பூர், மஸ்ஜிட் இந்தியா நில அமிழ்வு சம்பவத்திற்குப் பிறகு மூடப்பட்டப் பகுதியில் ஒரு பகுதி சாலை மீண்டும் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் மாநகராட்சி வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், மஸ்ஜிட் இந்தியா சாலையில், போலீஸ் நிலையம் அருகே உள்ள பகுதியும் கடைகள் உள்ள பகுதியும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நில அமிழ்வுக்கு இலக்கான இடம் இன்னும் மூடப்பட்டுள்ளது. இருப்பினும், இங்குள்ள பழுதுபார்க்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.முன்னதாக, எதிர்வரும் 2025ஆம் ஆண்டு பிப்பரவரி மாதம் இப்பகுதி முழுமையாகத் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வாண்டு இறுதியிலேயே திறக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.