புதிய MYKAD அடையாள அட்டையை அறிமுகம் செய்ய உள்ளது

மலேசியாவின் தேசிய பதிவகமான JPN நவீன வடிவமைப்பில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கொண்ட புதிய MYKAD அடையாள அட்டையை அறிமுகம் செய்ய உள்ளது. கடந்த 2012 முதல் தற்போது வரை பயன்பாட்டில் இருக்கும் MYKAD அட்டைகள் அனைத்தும் புதிய மைக்கேட் அட்டைகளாக மாற்றப்படும் என துணை உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஷம்சுல் அன்வர் நசரா தெரிவித்தார்.

புதிய MYKAD அட்டை மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். இது போலியான MYKAD அட்டைகளை தயாரிப்பதைத் தடுக்கும். இந்த அட்டை சிறந்த தரமான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும். மேலும், இதில் பல கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

புதிய MYKAD அட்டையை தயாரிப்பதற்கான செலவு குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது. இதற்கு பதிலளித்த துணை அமைச்சர், இந்தப் புதிய அடையாள அட்டையை தயாரிப்பதற்கான செலவு குறைவாக இருக்கும் என்றும் இந்த அட்டையை தயாரிப்பதற்கு அரசாங்கம் அதிக பணம் செலவு செய்யாது என்றும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS