ஜோகூர், நவ. 20-
ஜோகூர், புக்கிட் காம்பிரில் ஒரு கண்டெய்னர் லாரியும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து பிற்பகல் 3 மணி அளவில் புக்கிட் காம்பிரிலிருந்து பாகோ செல்லும் சாலையில் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
சமூக ஊடகங்களில் தீவிரமாகப் பரவிகாணொலியில், சில குழந்தைகள் உட்பட பலர் விபத்து நடந்த இடத்தில் காயமடைந்துள்ளதாகத் தெரிகிறது. ஒரு டிரெய்லர் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த விபத்து நிகழ்ந்ததை மூவார் மாவட்டக் காவல் துறைத் தலைவர் ரைஸ் முக்லிஸ் உறுதிப்படுத்தினார்.
இந்த விபத்தால் சாலை மையப்பகுதி முற்றிலும் அடைபட்டு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.