நவ. 20-
கருப்பு நிற TOYOTA HILUX வகை வாகனத்தை ஓட்டிச் சென்ற ஒருவர், காவல் துறையினரால் மூவாரில் இருந்து கோலாலம்பூர் வரை சுமார் 180 கிலோமீட்டர் தூரம் வரை துரத்தப்பட்டச் சம்பவம் இன்று அதிகாலையில் நிகழ்ந்துள்ளது. இருப்பினும், அந்த வாகனத்தை செலுத்திட ஓட்டுநர் தப்பி விட்டார்.
மூவார் மாவட்ட காவல் துறையின் உ Asisten Komisioner Raiz Mukhliz Azman Aziz கூறுகையில், இச்சம்பவம் இன்று அதிகாலை 2:30 மணிக்கு மூவார், JALAN BAKRIயில் போக்குவரத்து சமிக்ஞை விளக்கை மீறி சென்றதால் நிகழ்ந்தது என்று கூறினார். மூவார் மாவட்ட காவல் நிலையத்திலிருந்து வந்த ஒரு ரோந்து கார் அந்த வாகனத்தை நிறுத்தும்படி கூறியபோது, சந்தேக நபர் தனது வாகனத்தை வேகமாக செலுத்தி தப்பி விட்டார்.
மலாக்கா காவல் துறை, புக்கிட் அமான் காவல் படை, கோலாலம்பூர் காவல்துறையின் போக்குவரத்து பிரிவின் உதவியுடன் சந்தேக நபரை Jalan Chan Sow Lin வரை துரத்தினர். இருப்பினும், சந்தேக நபர் போலீஸ் வாகனம் செல்ல முடியாத கரடு முரடானப் பாதையிலும் ஒரு சாலையின் எதிர் திசையிலும் வாகனத்தை ஓட்டி தப்பி விட்டார்.
தற்போது, சந்தேக நபரையும் குறிப்பிட்ட அந்த வாகனத்தையும் கண்டுபிடிக்க தீவிர தேடுதல் நடைபெறுகிறது. பொதுமக்களுக்கு இந்த வாகனம் அல்லது சந்தேக நபர் குறித்த தகவல் தெரிந்தால் அருகிலுள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என்று Raiz Mukhliz Azman Aziz கேட்டுக்கொண்டார்