குற்றம் சாட்டப்பட்டவர் பணி இடைநிறுத்தம்

கோலாலம்பூர், நவ. 20-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான KLIAஇல் நுழையத் தடை உத்தரவு வழங்கப்பட்ட ஒரு வெளிநாட்டவரை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அந்தோணி லோக், அந்த நபர் மலேசிய விமான நிலையங்கள் நிறுவனமான MAHB இன் ஊழியர் அல்ல, மாறாக AeroDarat Services Sdn Bhd. நிறுவனத்தின் ஊழியர் என்று தெரிவித்தார். மலேசிய ஏர்லைன்ஸின் தாய் நிறுவனமான Malaysia Aviation Group இன் கீழ் AeroDarat செயல்படுகிறது என்றும் அவர் கூறினார். NTL வழங்கப்பட்ட பயணிகளை அவர்கள் கடைசியாக புறப்பட்ட இடத்திற்குத் திருப்பி அனுப்புவது அனைத்து விமான நிலையங்களிலும் வழக்கமான நடைமுறையாகும்.

அந்த ஊழியரை, குறிப்பிட்ட அந்தப் பயணி கோபத்தைத் தூண்டும் விதமாக நடந்து கொண்டார் எனக் கூறினார். பயணிகள் சில சமயங்களில் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளலாம், ஆனால் எந்தவொரு சூழ்நிலையிலும் ஊழியர்கள் தங்களின் செயலை நியாயப்படுத்த முடியாது” என்று அந்தோணி லோக் கூறினார். அவர் நம்முடைய விமான நிலையங்களில் ஒரு ஊழியராக இருப்பதால், அவர் எப்போதும் தொழில்முறை ரீதியாக பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அந்த ஊழியர் அவ்வாறு நடந்து கொண்டது குறித்து விளக்கம் கொடுக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.தற்போது நடந்து கொண்டிருக்கும் விசாரணை முடிவடையும் வரை தற்காலிகமாக அவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார் என அந்தோணி லோக் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS