புத்ராஜெயா, நவ. 29-
வெள்ளத்தினால் உயர் கல்விக்கூடங்களைச் சேர்ந்த 3,029 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஸம்ரி அப்துல் காதீர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களில் இதுவரையில் 481 பேர் நிவாரண மையங்களுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர். 42 பேர், நிவாரண மையங்களுக்கு வெளியே பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தாங்கள் தங்கியுள்ள பகுதியில் உள்ள மற்ற மாணவர்களின் நிலை அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
கிழக்குகரை மாநிலங்களில் சுல்தான் ஸைனால் அபிடின் பல்கலைக்கழகம், திரெங்கானு மலேசியப் பல்லைக்கழகம், கிளந்தான் மலேசியப் பல்கலைக்கழகம் மற்றும் போலிடெக்னின் கல்லூரிகள் ஆகியவற்றை சேர்ந்த மாணவர்கள் வெள்ளப் பாதிக்கு ஆளாகியிருப்பதாக டத்தோஸ்ரீ ஸம்ரி குறிப்பிட்டார்.