அலோர்ஸ்டார், நவ. 29-
கெடா மாநிலத்தில் வெள்ளத்தினால் அலோர் ஸ்டார் சுல்தான் அப்துல் ஹலிம் விமான நிலையத்தின் ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
விமானம் ஓடுபாதையில் நீரின் மட்டம் உயர்ந்து, கரைபுரண்டோடுவதால் விமானங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விமான நிலையத்தின் ஓடுபாதை தற்காலிகமாக இன்று மூடப்பட்டுள்ளது.
எனினும் விமான நிலையம் தொடர்ந்து திறக்கப்பட்டுள்ளதாக மலேசிய ஏர்போர்ட் பெர்ஹாட் தெரிவித்துள்ளது.