கோத்தாபாரு, நவ. 29-
தற்போது பெய்து வரும் அடை மழையில் ஒன்பது மாநிலங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒன்பது மாநிலங்களிலும் இன்று மதியம் 12 மணி வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 ஆயிரத்து 036 பேராக இருந்தது. மாலையில் வெளியிடப்பட்ட ஆகக்கடைசி நிலவரத்தில் அந்த எண்ணிக்கை 90 ஆயிரத்து 273 பேராக உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பகுதியினர், கிளந்தான் மற்றும் திரெங்கானு மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்று வெள்ளப் பேரிடர் நிர்வாக மையம் தெரிவித்துள்ளது.