கோலாலம்பூர், நவ. 29-
இறக்குமதி செய்யப்பட்ட பச்சரிசி விலை, வரும் டிசம்பர் முதல் தேதியிலிருந்து விலை குறைகிறது. தீபகற்ப மலேசியாவில் தேசிய அரிசி வாரியமான பெர்னாஸ் கிடங்கில் பச்சரிசி விலை டன்னுக்கு மூவாயிரம் ரிங்கிட்டிலிருந்து 2,800 ரிங்கிட்டிற்கு குறைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விலை, நாளை மறுநாள் டிசம்பர் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது என்று விவசாயத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு அறிவித்துள்ளார்.
அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருவதைத் தொடர்ந்து இறக்குமதி செய்யப்படும் பச்சரிசி விலை குறைந்துள்ளதாக அமைச்சர் விளக்கினார்.