கோலாலம்பூர், நவ. 29-
வெள்ளப் பேரிடரிலிருந்து மக்களை மீட்கவும், பாதுகாக்கவும், அவர்களுக்கு வேண்டிய நிவாரண உதவிகளை வழங்கவும் மலேசிய இராணுவப்படை தயார் நிலையில் இருப்பதாக அதன் தளபதி டான்ஸ்ரீ முகமட் ஹபிஸுடீன் ஜந்தான் அறிவித்துள்ளார்.
வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் தேவையான உதவிகளை வழங்கும் பொருட்டு தற்போது 3,552 வீரர்களுடன் 192 அதிகாரிகள் ஓப்ஸ் முர்னி செயல்திட்டம் வாயிலாக தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில் வெள்ள நிலைமை மோசமடையுமானால், உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.