லோரியின் இயந்திரப் பகுதியில் மலைப்பாம்பு

கோலாலம்பூர், நவ. 29-


லோரியில் ஓட்டுநரின் இருக்கையின் கீழ் உள்ள இயந்திரப்பகுதியில் படுத்திருந்த மலைப்பாம்பு ஒன்று வளைத்துப்பிடிக்கப்பட்டது.

கோலாலம்பூர், ஸ்ரீ சபா அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார்த்திபன் என்பவருக்கு சொந்தமான லோரியின் இயந்திரப்பகுதியில் படுத்திருந்த 7 அடி நீளமுள்ள அந்த ராட்ஷச மலைப்பாம்பு, குடியிருப்புவாசிகளின் ஒத்துழைப்புடன் பிடிக்கப்பட்டது.

இன்று காலை 9.30 மணியளவில் வேலைக்கு புறப்படுவதற்காக தனது லோரியின் இயந்திரத்தை முடுக்கி பார்த்திபன், இருக்கையின் அடியிலிருந்து சீறும் சத்தத்தை கேட்டுக்கொண்டு, பயந்துப் போனார்.

சந்தேகதின் பேரில் இருக்கையின் அடியில் கீழ் உள்ள இயந்திரப்பகுதி போனட்டை திறந்து பார்த்த போது, மலைப்பாம்பு ஒன்று , இயந்திரத்தின் சாதனங்களின் அமைப்பு முறைக்கு ஏற்ப மிக லாவகமாக சுருண்டுப் படுத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளார்.

சுமார் 20 நிமிடப் போராட்த்திற்கு பின்னர் பொதுமக்களின் உதவியுடன் அந்த மலைப்பாம்பை வளைத்துப் பிடித்த பார்த்திபன், பண்டார் துன் ரசாக், தீயணைப்பு, மீட்புப்படை நிலையத்தில் அந்த மலைப்பாம்பை பாதுகாப்பாக ஒப்படைத்தார்.

WATCH OUR LATEST NEWS