பாலியல் பலாத்காரம் : மாணவனுக்கு சமூக சேவையில் ஈடுபட உத்தரவு

சிரம்பான், நவ. 29-


கடந்த மே மாதம் 13 வயது தனது காதலியை பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றத்திற்காக கல்லூரி மாணவன் ஒருவனை, இரண்டு ஆண்டு காலத்தில், 240 மணி நேரம் சமூகப்பணிகளில் ஈடுபடுவதற்கு சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ரொனால்டு சில்லோ சுண்டி என்ற அந்த 20 வயது மாணவன், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி சுரிதா புடின் இத்தீர்ப்பை வழங்கினார்.

240 மணி நேர சமூகப்பணியை ஈடுபடும் உத்தரவை அந்த மாணவன் மீறுவானேயானால், கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவில் சட்டத்தின் கீழ் மீண்டும் நீதிமன்றத்தில் நிறுத்தும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த மே 15 ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் போர்ட்டிக்சனின் உள்ள ஒரு ஹோட்டலில் அந்த மாணவன் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சமூக நல இலாகா வழங்கிய அறிக்கையின் பரிந்துரைக்கு ஏற்ப அந்த மாணவனுக்கு சமூகப்பணிகள் தன்மையில் தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதையும் நீதிபதி சுரிதா புடின் தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.

WATCH OUR LATEST NEWS