உலுதிரெங்கானு, நவ. 29-
உலு திரெங்கானு, கம்போங் புக்கிட் அபிட், அஜில், என்ற இடத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் இரண்டு சகேதரிகள் புதையுண்டு மாண்ட வேளையில் மற்றொருவர் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
இச்சம்பவம் இன்று மாலை 4.59 மணியளவில் நிகழ்ந்தது. புதையுண்ட இரு சகோதரிகளும்,, காயமுற்ற சகோதரனும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளையில் அவ்விரு சகோதரிகளும் இறந்து விட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
16 வயது புத்ரி சாஜிடா அஸ்மான், அவரின் 13 வயது சகோதரி சித்தி பாத்திமா அஸ்மான் ஆகியோரே இச்சம்பவத்தில் மாண்டவர்கள் என்று தீயணைப்பு மீட்புப்படையினர் அடையாளம் கூறினார்.
அந்த இரண்டு பெண்களின் 17 வயது சகோதரன் உசாயிர் அஸ்மான் என்பவர் கடும் காயங்களுடன் உலு திரெங்கானு, சுல்தானா நூர் ஸாஹிரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.