கோலாலம்பூர், நவ.30-
கோலாலம்பூர், செராஸில் ஒரு பேரங்காடி மாலில் உள்ள ஓர் உணவகத்தில் சீன நாட்டுப்பிரஜை ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர புலன் விசாரணை செய்து வருகின்றனர்.
நேற்று பிற்பகல் 3 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் குத்தி கொலை செய்யப்பட்ட சீன நாட்டைச் சேர்ந்த 49 வயது மாது, அந்த உணவகத்தில் கேஷியராக பணிபுரிந்து வந்துள்ளார். அவரின் உடலில் ஐந்து இடங்களிலும் ஆழமான கத்திக்குத்துக் காயங்கள் காணப்பட்டதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் அயிடில் போலஸ்ஸான் தெரிவித்தார்.
உயிரிழந்த மாதுவின் 7 சகாக்களை போலீசார் கைது செய்து இருப்பதாக உடகங்களுக்கு அனுப்பிய செய்தியில் அயிடில் போலஸ்ஸான் குறிப்பிட்டார்.
சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளை போலீசார் தற்போது தேடி வருவதாக அவர் மேலும் கூறினார்