பேரா பட்ஜெட்டில் பாதித் தொகை மக்களின் நல்வாழ்வாகும்

பேரா, நவ. 30-

பேரா மாநில அரசாங்கம், நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்த 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் மொத்த ஒதுக்கீட்டுத் தொகையில் பாதி, மாநில மக்களின் நல்வாழ்வுக்குரியதாகும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சாரணி முகமட் தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மொத்தம் 1.52 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 628.65 மில்லியன் ரிங்கிட் அல்லது மொத்த பட்ஜெட் தொகையில் பாதி, மக்களின் நல்வாழ்வு சார்ந்த விவகாரங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

இதில் மக்களுடன் மக்களாக அணுக்கமாக கையாளும் நல்வாழ்வுக்குரிய திட்டங்களுக்கும் மட்டும் 30.22 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதை டத்தோ ஸ்ரீ சாரணி சுட்டிக்காட்டினார்.

WATCH OUR LATEST NEWS