சுபாங் ஜெயா, நவ. 30-
கடந்த வாரம் கோலாலம்பூரில் உள்ள பேரங்காடியில் 64 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள ரோலெக்ஸ் ரக கைக்கடிகாரத்தை களவாடிய நபர், நேற்று சுபாங் ஜெயாவில் பிடிபட்டார்.
அந்த விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை சுபாங்ஜெயா, எஸ்.எஸ். 16இல் பிரபல கடிகாரக் கடை ஒன்றில் நேற்று மாலை 4.15 மணியளவில் 25 ஆயிரம் வெள்ளிக்கு விற்பதற்கு அந்த ஆடவர், முயற்சி செய்த போது, போலீசாரால் வளைத்துப்பிடிக்கப்பட்டதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.
உள்ளுரைச் சேர்ந்த 44 வயது மதிக்கத்தக்க அந்த நபருக்கு ஏற்கனவே இரண்டு குற்றப்பதிவுகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த வாரம் கோலாலம்பூரில் பிரபல கைக்கடிகார கடை ஒன்றில் வாடிக்கையாளரைப் போல் நடித்து, அந்நபர், ரோலெக்ஸ் கைக்கடிகாரத்தை திருடியுள்ளார் என்று வான் அஸ்லான் விளக்கினார்.