கோலாலம்பூர், நவ. 30-
மலேசியாவில் 16 வயதுக்கு கீழ்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தடை விதிப்பது குறித்து பரிசீலிக்குமாறு சட்டத்துறை நிபுணர் ஒருவர் இன்று பரிந்துரை செய்துள்ளார்.
இவ்விவகாரத்தில் மலேசிய அரசாங்கம், ஆஸ்திரேலியாவை ஒரு முன்னுதாரணமாக கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு கீழ் பட்டவர்கள் டிக் டாக், இன்ஸ்டகிராம், ஸ்நேப்சாட், ஃபேஸ் புக், ரெட்டிட் மற்றம் எக்ஸ் ஆகிய சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் முற்றாக தடை விதித்து இருப்பதாக வழக்கறிஞர் முகமட் அக்ராம் அப்துல் அஸிஸ் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகளங்களை பயன்படுத்துகின்றவர்களுக்கு குறைந்த பட்ச வயது விகிதத்தை பெரும்பாலான நாடுகள் ஓர் அளவுக்கோலாக பயன்படுத்தி வருகின்றன.
சிந்தனை ரீதியாக முதிர்ச்சி நிலை பெறாத பருவத்தில் உள்ளவர்கள், அந்த தளத்தை தவறாக பயன்படுத்தி விடக்கூடாது, அதனால் அவர்களுக்கு நேர்மறையான விளைவுகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக வயது வரம்பபை நிர்ணயித்து, கட்டுப்படுத்தி வருவதாக அந்த சட்ட நிபுணர் தெரிவித்தார்.
அதேபோன்ற ஒரு கட்டுப்பாட்டை மலேசியாவிலும் கொண்டு வருவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.