குவந்தான், நவ. 30-
பகாங் மாநிலத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த தனியார் பல் கிளினிக்கில் மாநில சுகாதார இலாகா இன்று திடீர் சோதனை மேற்கொண்டது.
மாநில சுகாதார பதிவில் இல்லாத அந்த தனியார் பல் கிளினிக், செயற்கை பற்களை கட்டும் சேவையை வழங்கி வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலில் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக மாநில சுகாதாரத்துறை இயக்குநர் டத்தோ டாக்டர் ருஸ்டி அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
இச்சோதனையின் போது தன்னை மருத்துவர் என்று கூறிக்கொண்ட 20 வயது பெண், அந்த தனியார் கிளினிக்கை நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த சட்டவிரோத கிளினிக், உடனடியாக மூடப்பட்டதுடன் அதனை வழிநடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.