கோலாலம்பூர், நவ.30-
தமது கணவரும், முன்னாள் நிதி அமைச்சருமான துன் டாயிம் ஜைனுதீனுக்கு எதிரான குற்றவியல் வழக்கில் அவரை நீதிமன்றம் விடுவித்தது என்ற போதிலும் அவருக்கு எதிரான சொத்து விபரங்கள் தொடர்பான விசாரணையை தொடரப் போவதாக அறிவித்து இருக்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM நடவடிக்கையை துன் டாயிமின் மனைவி தோ புவான் நையிமா காலிட் இன்று சாடினார்.
சொத்து விபரங்களை அறிவிக்காதது தொடர்பில் துன் டாயிமிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றவியல் வழக்கு நடந்து கொண்டிருக்கும் பட்சத்தில் அவர் இறந்து விட்டார்
வழக்கில் அவர் விடுவிக்கப்பட்ட போதிலும் அவருக்கு எதிராக SPRM மேற்கொண்டு வரும் விசாரணைகள் தொடரும் என்று அதன் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி அண்மையில் அறிவித்து இருந்தார்.
அதற்கு எதிர்வினையாற்றிய 67 வயதுடைய நையிமா காலிட், நடப்பு அரசாங்கமும், எஸ்.பி.ஆர்.எம். முன் நீதிமன்ற முடிவை மதிக்கவில்லை என்று இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.