கோலாலம்பூர், நவ. 30-
கோலாலம்பூர் செராஸில் பேரங்காடி மையத்தில் உள்ள ஓர் உணவகத்தில் அதன் பெண் கேஷியர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 பேர், விசாரணைக்கு ஏதுவாக 7 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் சீன நாட்டைச் சேர்ந்த 49 வயது பெண் கேஷயல் உடலில் ஐந்து இடங்களில் ஆழமான கத்திக்குத்து காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டார்.
அந்த பெண் கேஷியரின் சகாக்கள் என்று நம்பப்படும் ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட எழுவரில் ஐவர் ஆண்கள் என்றும் இருவர் பெண்கள் என்றும் செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அயிடில் போல்ஹசான் தெரிவித்தார்.