அந்திம காலத்தில் பழைய நினைவுகளை அசைப்போட்டு அகமகிழ்ந்தார் டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன்

கோலாலம்பூர், நவ. 30-


கடந்த வியாழக்கிழமை தமது 86 ஆவது வயதில் காலமான மலேசிய முன்னணி தொழில் அதிபரும், கோடீஸ்வரருமான டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன், தமது அந்திமக் காலத்தில் பழைய நினைவுகளை அசைப்போட்டு, அகமகிழ்ந்தார் என்று அவரின் மூன்று பிள்ளைகள் தெரிவித்துள்ளனர்.

டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன், தமது இறுதி காலத்தில் சுவிட்சர்லாந்தில் உள்ள தமது வீட்டில் ஓய்வெடுத்த போது, தம்முடைய நீண்ட நெடிய வாழ்க்கைப் பயணத்தில் தாம் சந்தித்த மனிதர்களையும், தாம் பெற்ற நன்மதிப்புகளையும் நினைத்து, அகமகிழ்ந்தார் என்று அவரின் மூன்று பிள்ளைகள் ஆத்மாத்தமாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில் தங்கள் தந்தையின் நீடித்த பயணத்தில் மக்கள் ஆற்றிய பங்களிப்புக்கும் அந்த மூன்று பிள்ளைகளும் தங்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணனை, ஒரு தனிப்பட்ட மனிதர் என்று அந்த மூன்று பிள்ளைகளும் வர்ணித்ததுடன், தங்கள் தந்தை எப்போதுமே உணர்ச்சிக்கரமான பிரியாவிடைகளை விரும்பியதில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

எனவே அவரின் இறுதிப்பயணத்தில் அவரை நினைவுகூர்ந்த் மக்களுக்கு எங்களின் நன்றியை பதிவு செய்கிறோம் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளளர்.

மலேசியாவின் ஆறாவது கோடீஸ்வரர் என்று வகைப்படுத்தப்பட்ட டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன், சுவிட்சர்லாந்து, ஆல்ப்ஸ் மலை வீற்றிருக்கும் பகுதியில் உள்ள தமது பண்ணை வீட்டில் கடந்த சில மாதங்களாக ஓய்வெடுத்து வந்துள்ளார். தமது இறுதி காலத்தில் அவர் நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டதாக அவரின் பிள்ளைகள் தெரிவித்தனர்.

டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன் நோய்வாய்ப்பட்டு இருந்த போதிலும் அவர் தொடர்ந்து சுறுசுறுப்பாக காணப்பட்டார். துருக்கில் தனது படகில் நேரத்தில் செலவிடுவார், அதேவேளையில் அவர் முன்னெடுத்த பல்வேறு திட்டங்களிலும் ஈடுபட்டு வந்தார் என்று பிள்ளைகள் நினைவுகூர்ந்தனர்.

சுவிட்சர்லாந்திற்குத் திரும்பியதும் ஆல்ப்ஸ் மலையின் மற்றொரு குளிர்காலத்தை அவர் எதிர்நோக்க வேண்டியிருந்ததையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்..

தங்கள் தந்தை எந்தவொரு நினைவுக் குறிப்பையும் எழுதவில்லை. அதேவேளையில் அவரின் பயணத்தில் சொல்லப்படாத கதைகளும் இருக்க வேண்டும். ஆனால், தமது இறுதி காலத்தின் கடைசி மாதத்தில் தமது பழைய நினைவுகளை அசைப்பட்டு மகிழ்ந்தார் என்பதை மட்டும் தங்களால் உணர முடிந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.

தவிர, தங்களுடைய தந்தைக்கு பிரியாவிடை கொடுக்கும் இத்தருணத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தங்கள் தந்தையுடன் இருந்த அந்த இனிய நினைவுகளை, புகைப்படங்களை, வீடியோ கிலிப்புகளை பகிர்ந்துக்கொள்ளுமாறு டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணனுடன் மிக நெருக்கமாக இருந்த நண்பர்களுக்கும், அறிமுகமானவர்களுக்கும் அந்த மூன்று பிள்ளைகளும் இன்று அழைப்பு விடுத்துள்ளனர்.
[2:23 pm, 30/11/2024] Emsamy Thisaigal news: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் வேறு எந்த மையத்திலும் தேர்வு எழுதலாம்

கோத்தாபாரு, நவ. 30-
வெள்ளத்தால் பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ள எஸ். பி. எம். தேர்வு எழுதும் மாணவர்கள், மாற்று எஸ். பி. எம் தேர்வு மையங்களில் தேர்வுக்கு அமரலாம் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS