டிசம்பர் – 01
இதற்கிடையில், பாலிங் மாவட்டத்திலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், மக்கள் தற்காலிகத் துயர் துடைப்பு மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதன் மூலம் கெடாவின் ஏழு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என கெடா மாநில பேரிடர் மேலாண்மை குழு குறிப்பிட்டுள்ளது.
கிளாந்தான் , திரங்கானு மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது கெடா மாநிலமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. கெடா மாநிலத்தில் வெள்ள பாதிப்புக்குள்ளான மக்களின் எண்ணிக்கை, நேற்று இரவு 8 ஆயிரத்து 580 ஆக இருந்த நிலையில், இன்று முற்பகல் 9 ஆயிரத்து 129 ஆக உயர்ந்துள்ளது.
Kota Setarரில் 13 தற்காலிகத் துயர் துடைப்பு மையங்களில் 3 ஆயிரத்து 301 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து,
Kubang Pasuவில் 16 தற்காலிகத் துயர் துடைப்பு மையங்களில் 2 ஆயிரத்து 824 பேரும்,
சிக் மாவட்டத்தில் 8 தற்காலிகத் துயர் துடைப்பு மையங்களில் ஆயிரத்து 120 பேரும்,
Padang Terapபில் 9 தற்காலிகத் துயர் துடைப்பு மையங்களில் ஆயிரத்து 50 பேரும்
தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், Pokok Senaவில் 4 தற்காலிகத் துயர் துடைப்பு மையங்களில் 614 பேரும்,
கோலா முடாவில் 2 தற்காலிகத் துயர் துடைப்பு மையங்களில் 182 பேரும்,
பாலிங்கில் ஒரு தற்காலிகத் துயர் துடைப்பு மையத்தில் 33 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாலிங் மாவட்டத்தின் Tawar வட்டாரத்தில் இருந்து மக்கள், இன்று கோலா கெட்டில்லில் உள்ள ஒரு பள்ளியில் அமைந்துள்ள தற்காலிகத் துயர் துடைப்பு மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.