டிசம்பர் – 01
UPM எனப்படும் Universiti Putra Malaysiaஇன் பெயரை மலேசிய விவசாயப் பல்கலைக்கழகம் Universiti Pertanian Malaysia என மாற்றுவது விவகாரம் குறித்து சிலாங்கூர் ஆட்சியாளர் Sultan Sharafuddin Idris Shah ஒப்புதல் வழங்காத நிலையில் அவ்விவகாரம் அமைச்சரவை வரையில் கொண்டு செல்லப்படாது என விவசாயம், உணவு பாதுகாப்பு அமைச்சர் Datuk Seri Mohamad Sabu கூறினார்.
அவர் கூறுகையில், சுல்தான் இந்த முன்மொழிவை ஏற்கவில்லை என்பதால் அந்தக் கருத்தை தாம் மதித்து ஏற்பதாகக் குறிப்பிட்டார். இந்த விவகாரத்தை மேலும் நீட்டிக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.
“சிலாங்கூர் சுல்தானும் UPM இன் துணைவேந்தரும் எடுத்த முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன். இந்த விவகாரத்தை மேலும் நீட்டிக்க விரும்பவில்லை. இது நல்ல முடிவு என்று நான் கருதுகிறேன். நாம் அனைவரும் இணைந்து பல்கலைக்கழகத்தின் மதிப்பை உயர்த்துவதில் கவனம் செலுத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.