டிசம்பர் – 01
நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பை எதிர்கொள்ள, தற்போதுள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தி மக்களுக்கு உதவ தயாராக உள்ளது என மலேசிய ஆயுதப்படை தெரிவித்துள்ளது.
இது குறித்து தகவல் அளித்த ஆயுதப் படைத் தளபதி Jen Tan Sri Mohammad Ab Rahman கூறுகையில், ஏற்கனவே 5 ஆயிரத்து 600 வீரர்கள் வெள்ள பாதிப்புக்குள்ளானப் பகுதிகளுக்குச் சென்று மீட்புப் பணீகளிலும் நிவாரண நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
செப்டம்பர் மாதமே வெள்ளப் பாதிப்பு ஏற்படலாம் என்று எதிர்பார்த்து தமது தரப்பு தயாராகிவிட்டதாகவும் இப்போது வெள்ளம் ஏற்பட்டுள்ளப் பகுதிகளுக்கு ஆயுதப் படை வீரர்கள் சென்றுள்ளதாகவும் அவட் குறிப்பிட்டார். தேவைப்பட்டால் மேலும் வீரர்களை அனுப்பவும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
நாளைய SPM தேர்வு எழுதும் மாணவர்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லவும் இராணுவம் உதவும் என்றும் கூறினார்.
கெடா மாநிலத்தில் உள்ள வான்படை கல்லூரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால், அங்குள்ள பயிற்சிகள் நிறுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
தற்போது நாட்டின் ஒன்பது மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டு சுமார் ஒரு இலட்சத்து 52 ஆயிரத்து 377 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.