டிசம்பர் – 01
நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பால் பாதிக்கப்பட்ட மக்களின் பிறப்புச் சான்றிதழ், அடையாள அட்டை போன்ற ஆவணங்களை இழந்திருந்தால், அவற்ற இலவசமாக மாற்றித் தரப்படும் என தேசிய பதிவகத்தின் வாயிலாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
வெள்ளப் பாதிப்பு குறைந்த பிறகு, தேசிய பதிவகத்தின் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான ஆவணங்களை மாற்றித் தருவார்கள் என அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail தமது X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம் வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். தற்போது, நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு நிலவி வருகிறது. ஒரு இலட்சத்து 52 ஆயிரத்து 377 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.