வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளாந்தான், திரங்கானு மாநிலங்களுக்கு கூடுதலாக தலா 25 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – பிரதமர் அறீவிப்பு

டிசம்பர் – 01

கிளாந்தான், திரங்கானு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, இவ்விரண்டு மாநிலங்களுக்கும் தலா 25 மில்லியன் ரிங்கிட் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் இன்று அறிவித்தார்.

அவர் நிதியமைச்சராகவும் இருப்பதால், பிரதமர் அலுவலகத்தின் ICU எனப்படும் செயல்பாட்டு ஒருங்கிணைப்பு பிரிவு மூலம் வழங்கப்படும் இந்த நிதி, சாலைகள், கால்வாய்கள் போன்ற அடிப்படை கட்டமைப்புகளை சரிசெய்வதற்கும், HULU BESUTஇல் சாலைகளின் உயரத்தை அதிகரிப்பதற்கும் பயன்படுத்தப்படும் என்று கூறினார்.

அத்துடன், திரங்கானு மாநிலத்தின் 14,000 அரசு ஊழியர்களுக்கு தலா 500 ரிங்கிட் சிறப்பு நிதியுதவி வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இதற்காக மொத்தம் 7.4 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS