15 ஆயிரம் வீடுகளை கட்டும் இலக்கை இது தாண்டியுள்ளது

டிசம்பர் – 01

தேசிய வீட்டுவசதி நிறுவனம் SPNB வாயிலாக 23 ஆயிரம் RUMAH MESRA RAKYAT வீடுகளை வெற்றிகரமாக கட்டியுள்ளது என வீடமைப்பு, உள்ளாட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார். 12வது மலேசிய திட்டத்தின் கீழ் 2025ஆம் ஆண்டுக்குள் 15 ஆயிரம் வீடுகளை கட்டும் இலக்கை இது தாண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

தமது அமைச்சு ஒதுக்கிய 683 மில்லியன் ரிங்கிட் நிதியில் கூடுதலாக 8,000 வீடுகள் கட்டப்பட்டு 53 விழுக்காடு நிறைவடைந்துள்ளது என்றார்.

15,000 வீடுகளை கட்டுவதற்கான ஆரம்ப கட்ட செலவு 1.23 பில்லியன் ரிங்கிட்டுடன் ஒப்பிடுகையில், கட்டப்பட்ட 23,000 வீடுகளின் மதிப்பு 1.92 பில்லியன் ரிங்கிட் ஆகும். 5 ஆண்டுகளில் இவ்வளவு பெரிய ஒதுக்கீடு என்பது, குறிப்பாக B40 தரப்புக்கு உயர்தர மலிவு வீடுகளை வழங்கும் மடானி அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என ஙா கோர் மிங் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு மட்டும், 3,500 வீடுகளை கட்டுவது இலக்காக இருந்தது, மேலும், SPNB 4,500 வீடுகளை கட்டி முடித்துள்ளது, இது 1,000 வீடுகள் அதிகரிப்பைக் காட்டுவதாக கோர் மிங் தெரிவித்தார்.

மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய மேலும் 5,400 வீடுகளைக் கட்ட தி SPNB திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு நாம் கூடுதல் நிதியுடன் மேலும் அதிகமான வீடுகள் கட்டப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்

WATCH OUR LATEST NEWS