மன நலம் குன்றிய ஒருவர் கைது செய்யப்பட்டார்

டிசம்பர் – 01

பேரா, மஞ்சோங் மாவட்டத்தில் உள்ள ஒஅந்தாய் ரெமிஸ் பகுதியில் மூன்று மீன்பிடி துறைமுகங்களை தீ வைத்து சேதப்படுத்தியதாக சந்தேகிக்கப்பட்டு மன நலம் குன்றிய ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இன்று அதிகாலை ஒரு மணி அளவில் நடந்த இந்த சம்பவத்தில், தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர்.
மஞ்சோங் மாவட்ட காவல் துறைத் தலைவர், Asisten Komisioner Hasbullah Abd Rahman கூறுகையில், 64 வயதான அந்த சந்தேக நபர் சம்பவ இடத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டதற்கு முன்பு சிசிடிவி கேமராவில் அவரது செயல் பதிவாகிய இருந்ததாகக் குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், குறிப்பிட்ட அந்த நபர் பெட்ரோல் போன்ற எரிபொருளைப் பயன்படுத்தி துறைமுகங்களை தீ வைத்துவிட்டு தப்பி ஓட முயற்சித்தார் எனவும் துறைமுக உரிமையாளரின் புகாரின்படி, 4 இலட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட் நட்டம் ஏற்பட்டிடுக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் வெளியிட்ட செய்தியாளர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தீ வைத்தல் தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்

WATCH OUR LATEST NEWS