மடானி கிராமத் தத்தெடுப்புத் திட்டத்தின் வாயிலாக கிராமங்களை மேம்படுத்தும் முயற்சி

டிசம்பர் – 01

கிராமப்புற வட்டார மேம்பாட்டு அமைச்சின் Kampung Angkat MADANI எனப்படும் மடானி கிராமத் தத்தெடுப்புத் திட்டத்தின் வாயிலாக கிராமங்களை மேம்படுத்தும் முயற்சி முன்னணவகிக்கிறது என அமைச்சரும் துணைப்பிரதமருமான Datuk Seri Dr Ahmad Zahid Hamidi குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், பாகான் டத்தோவில் உள்ள Kampung Sungai Betulஇல் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்காக 2.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவும் இவை அனைத்தும் கடந்த நவம்பர் 30ஆம் தேதிக்குள் முடிவடைந்ததாக வும் அவர் கூறினார்.

குறைந்த மாணவர் எண்ணிக்கையுள்ள பள்ளியாக இருந்தாலும், Sungai Betul தேசியப் பள்ளியின் கால்பந்து மைதானத்தை மேம்படுத்துவதற்கு உதவி புரிவதாகவும் அவர் கூறினார்.

Kampung Angkat MADANI திட்டத்தில் கிராம சாலைகள் , பாலங்கள் , பாலங்கள், மக்கள் கூடம், கால்பந்து மைதானம் போன்றவை பழுது பார்க்கப்பட்டு அங்குள்ள மசூதி மேம்படுத்தப்படும். ஏழை மக்களின் வீடுகளை பழுதுபார்க்கும் பணியையும் அவ்வமைச்சு குறிப்பிட்டத் திட்டத்தின் கீழ் மேற்கொண்டுள்ளது.

அதே சமயம், அமைச்சின் மூலம் திறன் மேம்பாட்டுப் கல்வி போன்ற சமூகத் திட்டங்களையும் செயல்படுத்துகிறது.

WATCH OUR LATEST NEWS