டிசம்பர் – 01
மழைக்காலத்தில் அடிப்படைத் தேவைக்கானப் பொருட்களின் விலையை உயர்த்துவது அல்லது பொருட்களைப் பதுக்கி வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்நாட்டு வணிகம், பயனீட்டாளர் ல் விவகார அமைச்சு எச்சரித்துள்ளது.
இது குறித்து பேசிய துணை அமைச்சர் Fuziah Salleh தெரிவிக்கயில், வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தார். மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் சலுகைகள் நிறுத்தி வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டப் பகுதிகளில் அடிப்படைத் தேவைக்கானப் பொருட்கள் போதுமான அளவில் இருப்பதாகவும், 2004 தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட மொத்த , சில்லறை விற்பனையாளர்கள் இந்த பகுதிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அவ்வமைச்சின் தலைமைச் செயல் அதிகாரி, Datuk Azman Adam குறிப்பிடுகயில், இதுவரை விலை உயர்வு குறித்தோ அல்லது பொருட்கள் பற்றாக்குறை குறித்தோ எந்தப் புகாரும் தமது தரப்புக்குக் கிடைக்கவில்லை என்றும், இருப்பினும், கிளாந்தன், திராங்கணுவில் 16 பெட்ரோல் நிலையங்கக் வெள்ளத்தால் மூடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.