டிசம்பர் – 01
சுமார் 12 ஆயிரம் மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணியில் உள்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது என அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail. தெரிவித்தார்.
பள்ளி மாணவர்கள் பிறப்புச் சான்றிதழ் இல்லாததால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. பிறப்புப் பதிவு செய்யத் தவறியதால் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்க உள்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது என Saifuddin குறிப்பிட்டார். ஆறு முதல் 12 மாதங்களுக்குள் இந்தப் பிரச்சனையை அமைச்சு தீர்க்கும் என Saifuddin தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சகத்துடன் இணைந்து, முறைப்படுத்தப்பட்ட கல்வி முறையில் இருக்கும் , ஆனால் அடையாள அட்டை இல்லாத சுமார் 12,000 மாணவர்களின் விவரங்களை திரட்டியுள்ளதாகவும் இவர்கள் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டார்.
ஆனால் இவர்களுக்கு அடையாள அட்டை இல்லை. உதாரணமாக, பெற்றோரின் திருமணம் சரியாக பதிவு செய்யப்படாததால் அவர்கள் தங்கள் குழந்தைகளின் பிறப்பையும் பதிவு செய்யவில்லை. இது கல்வி அமைச்சுடன் தமது அமைச்சும் பகிர்ந்து கொண்ட சுமார் 12,000 மாணவர்களின் பதிவு என அவர் விளக்கம்ளித்தார்.
இவர்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அதே வகையில் தவறவிடப்பட்டவர்கள் இருந்தால், இவ்விரு அமைச்சும் தங்களின் தரவை புதுப்பிக்கும் என்று சைஃபுடின் கூறினார்.
இதற்கிடையில், பிறப்பு பதிவு செய்ய வேண்டிய பொறுப்பு தீபகற்ப மலேசியாவில் 60 நாட்களுக்குள், சபா மற்றும் சரவாக் மாநிலங்களுக்கு 42 நாட்களுக்குள் இருப்பது பலருக்கு சரியாகத் தெரியாது என்றார்.
தாமதமாக பதிவு செய்யும் போது, குழந்தைகள் பள்ளிக்கு அடையாள அட்டை இல்லாமல் செல்வது அல்லது பள்ளி முடிந்த பிறகு பிறப்பு சான்றிதழ் இல்லாதது போன்ற சூழ்நிலைகள் ஏற்படுகின்றன. இதனால் மேற்படிப்பு படிப்பது கடினமாகிறது நோய்வாய்ப்பட்டால், காய்ச்சலுடன் மருத்துவமனைக்குச் சென்றால் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே இப்போது நாம் அதை விரைவுபடுத்த விரும்புகிறோம் என்றார் அவர்.