டிசம்பர் – 01
தலைநகர், ஜாலன் மெனாரா 1 இல் ஏற்பட்ட நில அமிழ்வின் காரணமாக அந்தச் சாலை தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. மேலும் பழுதுபார்ப்பு பணிகள் நாளை முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து கோலாலம்பூர் மாநகர் மன்றம் X தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், நில அமிழ்வு குறித்த தகவல் கிடைத்தவுடன் உடனடியாக அந்த இடத்திற்குச் சென்று ஆய்வு செய்ததில், உடைந்த கழிவுநீர் குழாயின் காரணமாக சுமார் 0.6 மீட்டர் ஆழத்தில் நில அமிழ்வு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தது.
இந்த சம்பவம் 35 ஆண்டுகளுக்கும் மேலான கழிவுநீர் குழாயாலும் தொடர்ச்சியான மழையால் ஏற்பட்ட மண் அழுத்தத்தாலும் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. சாலை பயனாளர்களுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாத வகையில், பாதிக்கப்பட்ட பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. உடைந்த கழிவுநீர் குழாய் தோண்டி எடுக்கப்பட்டு புதிய நீடித்த கழிவுநீர் குழாய் பொருத்தப்படும்.
நில அமிழ்வு ஏற்பட்டப் பகுதியில், மீண்டும் இது போன்ற சம்பவம் மீண்டும் ஏற்படாமல் தடுக்க, சிறப்பு பொருட்களால் நிலத்தை உறுதிப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வானிலை சரியாக இருந்தால், நாளை இந்த பணி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என DBKL குறிப்பிட்டது.