மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்

முன்னாள் அம்னோ தகவல் தொடர்புத் துறைத் தலைவர் Shahril Hamdanஐயும் முன்னாள் அம்னோ துணைத் தலைவர் Datuk Seri Hishammuddin Hussein யும் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ள தயாராக இருப்பதாக அதன் நடப்புத் தலைவர் Datuk Seri Ahmad Zahid Hamidi தெரிவித்துள்ளார்.

இது தவிர, அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பல முன்னாள் அம்னோ தலைவர்களும் இதில் அடங்குவர் என்றார்.

சாலாக் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Seri Tajuddin Abdul Rahman மீதான இடைநீக்கத்தை கட்சி திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறினார். இது குறித்து பேசிய Datuk Seri Ahmad Zahid குறிப்பிடுகயில், முன்னாள் பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் கட்சியிடம் நான்கு முறை மன்னிப்பு கோரியுள்ளார் என்று தெரிவித்தார்.

Tajuddin போன்றே செயல்பட்ட வேறு உறுப்பினர்கள் இருந்தால், உச்சமன்ற உறுப்பினர்களும் அதே முடிவை எடுக்கலாம் என்று தாம் நினைப்பதாகக் கூறிய Zahid, Nenggiri, Mahkota தேர்தலின் போது Tajuddin தனது ஆதரவை நிரூபித்தார். கடந்த அம்னோ பொதுக்குழு கூட்டத்திலும் Tajuddin கலந்து கொண்டார். உச்சமன்றம் ஏன் அவரை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று எனக்குத் தெரியவில்லை” என்று அவர் கூறினார்.

சமீபத்தில், அம்னோ உச்சமன்றம் Datuk Seri Tajuddinனின் உறுப்பியத்தை உடனடியாக மீட்டெடுக்க ஒப்புக்கொண்டது. முன்னதாக, அம்னோ கட்சி Shahril Hamdan வ் Datuk Seri Hishammuddin ஆகியோரின் உறுப்பியத்தை ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்தது.

அத்துடன், அம்னோ கட்சியின் முன்னாள் இளைஞர் தலைவர் Khairy Jamaludin, Tan Sri Noh Omar ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கியது. 15வது பொதுத் தேர்தலின் போது கட்சியை விமர்சித்ததற்காக Datuk Seri Tajuddin கடந்த 2022 செப்டம்பர் முதல் ஆறு ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS