புத்ராஜெயா, டிச.2-
நாடு முழுவதும் ஐந்தாம் படிவ மாணவர்களுக்கான SPM தேர்வு, இன்று டிசம்பர் 2 ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்கியது. பல்வேறு மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்ட போதிலும், எஸ்.பி.எம். தேர்வு முதல் நாளான இன்று எவ்வித பாதிப்பு மற்றும் இடையூறின்றி சமூகமாக தொடங்கி இருப்பதாக கல்வி அமைச்சர் ஃபாட்ஹிலினா சீடேக் தெரிவித்துள்ளார்.
வெள்ளப்பகுதிகளில் பாதிக்கப்பட்ட மாணவர்கள், மாற்று இடத்தில் தேர்வு எழுதுவதற்கு ஏதுவாக அவர்களை இடம் மாற்றும் ஓப் பாயோங் நடவடிக்கையும் நேற்று சுமூகமாக அமல்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
எஸ்பி.எம். தேர்வு சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு வெள்ளி நிலைமையையும் கல்வி அமைச்சு அணுக்கமாக கண்காணித்து வருவதாக ஃபாட்ஹிலினா சீடேக் தெரிவித்தார்.