ஜோ லோவை தேடுவதில் போலீஸ் ஆர்வம் காட்டவில்லை

கோலாலம்பூர், டிச.2-


முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்குடன் தொர்புபடுத்தப்பட்ட 1MDB நிதி முறைகேடு தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மலேசிய தொழில் அதிபர் ஜோ லோவை தேடுவதில் அரச மலேசிய போலீஸ் படையும், மலேசிய ஊழல் தடுப்பு நிறுவனமான SPRM- மும் ஆர்வம் காட்டவில்லை என்று நஜீப்பின் முதன்மை வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லா குற்றஞ்சாட்டினார்.

தற்போது நடைபெற்று வரும் 1எம்டிபி.நிதி முறைகேடு தொடர்பான வழக்கில் வெளிநாட்டில் பதுங்கியிருப்பதாக கூறப்படும் ஜோ லோ,-வை கைது செய்து நீதிமன்றத்தின் முன்நிறுத்தப்படுனால் தனக்கு எதிரான குற்றச்சாட்டிலிருந்து நஜீப் விடுதலை செய்யப்படுவார் என ஷாபி அப்துல்லா தெரிவித்தார்.

1எம்டிபி.நிதி நிதி முறைகேடு தொடர்பான வழக்கில் பிரதான குற்றவாளி ஜோ லோ என்பது நீதிமன்ற விசாரணையில் அம்பலமானது. அவரை பிடித்து, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டால் நஜீப்பிற்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர் விடுதலை செய்யப்படுவார் என்ற ஷாபி அப்துல்லா குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS