சிம்பாங் அம்பாட், ஸ்ரீ கருமாரியம்மன் நிலப்பிரச்னைக்கு சுமூகமாக தீர்வு

பினாங்கு, டிச.2-


பினாங்கு, சிம்பாங் அம்பாட், தாமான் மேராக், ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தின் நுழைவாயில் வீற்றிருக்கும் மற்றவருக்கு சொந்தமான நிலவிவகாரப் பிரச்னைக்கு இறுதியில் சுமூகமாக தீர்வு காணப்பட்டது.

பினாங்கு மாநில வீடமைப்பு, சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு தலையிட்டதன் பலனாக ஆலயத்தின் நில விவகாரப்பிரச்னை, தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டு காலமாக நீடித்து வந்து வந்த அசாஸ் டுனியா நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தில் வீற்றிருந்த ஆலயத்தின் நுழைவாயில் நிலப்பகுதியை, நிறுவனத்துடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்தி, ஒற்றரை ஏக்கர் நிலப்பகுதியை 7 லட்சம் ரிங்கிட்டிலிருந்து மூன்றரை லட்சம் ரிங்கிட்டிற்கு குறைத்து வாங்குவதற்கு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு துணை புரிந்தார்.

ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய நிர்வாகத்திற்கும், நில உரிமையாளரான அசாஸ் டுனியா நிறுவனத்திற்கு இடையிலான ஒப்பந்தம், டத்தோஸ்ரீ சுந்தராஜு முன்னிலையில் கடந்த நவம்பர் 27 ஆம் தேதி நடைபெற்றது.

பல ஆண்டு காலமாக நீடித்து வந்த இப்பிரச்னைக்கு சுமூகமாக தீர்வு கண்ட டத்தோஸ்ரீ சுந்தராஜுவிற்கு ஆலய நிர்வாகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக விற்கு ஆலயத் தலைவர் பாஸ்கரன் குறிப்பிட்டார்.

பினாங்கில் மாநி அரசு சார்பில் வீற்றிருக்கும் இந்தியர்களின் தலைவர் என்ற முறையில் தம்மிடம் கொண்டு வரப்பட்ட ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய நில விவகாரப்பிரச்னைக்கு, தொடர் பேச்சுவார்த்தையின் பலனாக சுமூகமாக தீர்வு காண்பதற்கு ஒத்துழைப்பு நல்கிய ஆலய நிர்வாகத்திற்கும், அசாஸ் டுனியா நிறுவனத்திற்கும், தமது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக டத்தோஸ்ரீ சுந்தராஜு குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS