டிச – 02
கடந்த சனிக்கிழமை, ஜோகூர்பார, Sungai Segget, Jalan Wong Ah Fook-கில் உள்ள நடைப்பாதையில் நிகழ்ந்த கைலப்பு தொடர்பில் நான்கு ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
35 க்கும் 46 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த நான்கு நபர்களும் அவர்கள், அப்பகுதியில் சுற்றிதிரிந்து கொண்டு இருந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் பாரு செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ரவூப் செலாமாட் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட நான்கு நபர்களில் ஒருவர், மதுபோதையில், இதர மூன்று ஆடவர்களுடன் வாய்தகராற்றில் ஈடுபட்டு, அடிதடியில் இறங்கியதாக போலீசாரின் பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நான்கு ஆடவர்களுக்கும் குற்றவில் மற்றும் போதைப்பொருள் தொடர்புடைய பழைய குற்றவியல் வழக்குகளின் பதிவு இருப்பதாக ரவூப் செலாமாட் குறிப்பிட்டார்.