கோலகிராய், டிச. 16-
வேகக்கட்டுப்பாட்டை இழந்து இருக்கலாம் என்று நம்பப்படும் எம்.பி.வி. வாகனம் ஒன்று, சாலையை விட்டு விலகி, ஆற்றில் பாய்ந்ததில் அதன் ஓட்டுநர் நீரில் அடித்துச் செல்லப்படுவதிலிருந்து கிராமத்து மக்களால் தெய்வாத்தீனமாக துரிதமாக காப்பாற்றப்பட்டார்..
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.23 மணியளவில் கிளந்தான், கோல கிராயில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் புரோட்டோன் எக்ஸோரா ரக வாகனத்துடன் ஆற்றில் விழுந்த 28 வயது ஓட்டுநர், துரித வேகத்தில் மீட்கப்பட்டதால் உயிர் பிழைக்க முடிந்தது.
சம்பந்தப்பட்ட நபர், பத்து ஜோங்கிலிருந்து தாமான் ஸ்ரீ பஹாகியாவை நோக்கி சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக கோல கிராய் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்ட். மஸ்லான் மாமாட் தெரிவித்தார்.