எல்லைப்பாதுகாப்புக்கு தொடர்ந்து முன்னுரிமை

கோலாலம்பூர், டிச.16-


நாட்டின் எல்லை பாதுகாப்புக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் இன்று உறுதி அளித்துள்ளார்.

பல்வேறு அச்சுறுத்தல்களிலிருந்து விடுபட்டு, மலேசியர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்கு எல்லைப்பாதுகாப்புக்கு அதீத முக்கியத்தும் அளிக்கப்படும் என்று ஐஜிபி உத்தரவாதம் வழங்கியுள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வாயிலாக உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது அமைதி இலாகாவிற்கு 560 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதையும் போலீஸ் படைத் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிதியின் வாயிலாக தரைமார்க்கமாகவும், கடல் வாயிலாகவும் எல்லை பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் என்று டான்ஸ்ரீ ரஸாருடின் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS