மோசடித் தன்மையிலான 56,294 உள்ளடக்கங்கள் அகற்றப்பட்டன

கோலாலம்பூர், டிச.16-


கடந்த ஜனவரிலிருந்து டிசம்பர் முதல் தேதி வரை சமூக வலைத்தளங்களில் மோசடிகளுக்கு வித்திடக்கூடிய 56 ஆயிரத்து 294 உள்ளடக்கங்களை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்.சி.எம்.சி. ஒத்துழைப்புடன் அகற்றப்பட்டுள்ளதாக தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நி சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களுடன் ஒப்பிடுகையில் அகற்றப்பட்டுள்ள மோசடித் தன்மையிலான உள்ளடக்கங்கள் அதிகரித்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார். கடந்த 2022 ஆம் ஆண்டில் 242 உள்ளடக்கங்களும், 2023 இல் 6 ஆயிரத்து 297 உள்ளடக்கங்களும் சமூக வலைத்தளங்களிலிருந்து அகற்றப்பட்டுள்ளதாக துணை அமைச்சர் விளக்கினார்.

அதேவேளையில் இணையத் தள மோசடிகளின் வாயிலாக கடந்த ஜனவரிலிருந்து அக்டோபர் மாதம் வரையில் 1.224 பில்லியன் அல்லது 122 கோடியே 40 லட்சம் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தியோ நி சிங் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS