கோலாலம்பூர், டிச.16-
அடுத்த ஆண்டில் தொடங்கப்படவிருக்கும் தேசிய பயிற்சி சேவையான PLKN 3.0 திட்டத்தில் ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் நாள் ஒன்றுக்கு சராசரி 64 ரிங்கிட் செலவிடப்படும் என்று தற்காப்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் நோர்டின் தெரிவித்தார்.
பங்கேற்பாளரின் பயிற்சி காலம் முடிவடையும் வரையில் அவர்களுக்கு உணவு, தேநீர், தங்கும் வசதி மற்றும் அவர்களின் இதர தேவைகளுக்கு இத்தொகையை அரசாங்கம் செலவிடவிருப்பதாக அமைச்சர் விளக்கினார்.
தவிர பங்கேற்பாளர்கள் PLKN முகாமிற்கு சென்று வருவதற்கான செலவினத்தையும் அரசங்கம் ஏற்பதாக இன்று நாடாளுமன்ற கட்டடத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் காலிட் நோர்டின் இதனை தெரிவித்தார்.