கோலாலம்பூர், டிச. 16-
தென்கிழக்காசிய நாடுகளுக்கான அமைப்பான ஆசியானின் தலைவராக அடுத்த ஆண்டு தாம் தலைமைப்பொறுப்பை ஏற்கும் பட்சத்தில் தம்முடைய ஆலோசகராக தாய்லாந்து முன்னாள் பிரதமரும், தற்போதைய பிரதமரின் தந்தையுமான தக்ஷின் ஷினவத்ரா வை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நியமித்துள்ளார்.
தென்கிழக்காசிய நாடுகளின் தலைவர்களின் அனுபவங்கள் மலேசியாவிற்கு மிகுந்த பலாபலனை அளிக்க வல்லதாகும் அந்த வகையில் அதிகாரப்பூர்வமற்ற நிலையில் மலேசியாவிற்கு உதவும் வகையில் தக் ஷினின் இந்த நியமனம் அமைகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
மலேசியாவிற்கு இரண்டு நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ள தாய்லாந்து பிரதமர் பாய்தோங்டர்ன் ஷின வர்த்தராவுடன் இணைந்து புத்ராஜெயாவில் நடத்திய கூட்டு செய்தியாளர்கள் கூட்டத்தில் பிரதமர் இதனை அறிவித்தார்.