கோலாலம்பூர், டிச. 16-
தமது கண்காப்பின் கீழ் உள்ள பெண் நோயாளிக்கு ஆபாச குறுந்தகவல்களை அனுப்பி, அவரை பாலியல் ரீதியாக தொல்லைக்கொடுத்து வந்ததாக நம்பப்படும் மனநல நிபுணத்துவ மருத்துவ ஆலோசகர் ஒருவர், மருத்துவ சேவையிலிருந்து ஓராண்டுக்கு பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மலேசிய மருத்துவர் மன்றத்தின் ஒழுங்கு நடவடிக்கை பிரிவினர், அந்த மன நல மருத்துவ நிபுணருக்கு எதிராக இந்த கடும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் என்று பாதிக்கப்பட்ட 30 வயதுடைய மாதுவின் வழக்கறிஞர் பிரான்சிஸ் பெரேரா தெரிவித்தார்.
அந்த மருத்துவ ஆலோசகருக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கை குறித்து மலேசிய மருத்துவர் மன்றம் தமக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது என்று அந்த வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.