ரானாவ், டிச. 17-
சபா, ரானாவில் இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. காலை 10.01 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 3.1 ஆக பதிவாகியுள்ளது.
ரானாவிலிருந்து மேற்காக சுமார் 14 கிலோ மீட்டரில் இந்த மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.
பத்து கிலோமீட்டர் ஆழத்தில் நிலைக்கொண்டிருந்த நிலநடுக்கம், மலேசியாவில் சுனாமிக்கான அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை. நேற்று பிற்பகலிலும் இதேபோன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக என்று அந்த ஆய்வு மையம் கூறுகிறது.
ரிக்டர் அளவுக்கோலில் 2.8 ஆக பதிவாகியிருந்த நேற்றையநிலநடுக்கத்துடன் ஒப்பிடுகையில் இன்று காலையில் ஏற்பட்ட நில நடுக்கம் சற்று கணம் வாய்ந்ததாக இருந்தது எனற் அந்த ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.